×

Edho onnu irukku's video:

@சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். ஏன்? எதற்கு? தெரிந்துகொள்வோம்!
சடங்கு வீட்டிற்கு சென்று வந்தவுடன் ஏன் குளிக்க வேண்டும்? தெரிந்துகொள்வோம்! மரணம் ஏற்பட்ட வீட்டிற்குசென்று வந்தவுடன் துணிகளை துவைத் து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது அக்காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற் கு முன் அதிலுள்ள சில நடை முறை கேள்விகளுக்கு பதில் தேடியாக வேண்டிய சூழல் உள்ளது. இறந்துபோன மனிதருடைய ஆவி, துக்கம் விசாரிக்க சென்றவர்க ளை தாக்கும் என்றும், அவர்களோடவே தொடரும் என்றும் அதனா ல்தான் குளிக்க சொல்லப்படுகி றது என்று பலர் சொல்கிறா ர்கள். ஒரு மரண நிகழ்விற்கு ஒருவர் மட்டும் செல்வதில்லை. உற்றார் உறவினர் நண்பர் என்று ஏராளமா ன பேர்கள் செல்கிறார்கள் இவர்க ளை ஆவி தாக்குகிறது என்றாலும், தொடர்கிறது என்றாலும் ஒருவரை மட்டும் தான் ஆவியால் குறி வைக் க முடியும். வந்து போகும் எல்லோரையும் தொடர்கிறது என்பது சாத்தியமில்லா தது ஆகும். அப்படி தொடரப்படும் ஒரு நபர் யார் என் று நமக்கு தெரியாது. அதனால் கலந்து கொள்ளும் எல்லாருமே குளித்து விட வேண்டியதுதான் என்றால்கூட அதிலும் ஒரு சிக்கலிரு க்கிறது. மயானத்தில் வெட்டியான் ஒரு நா ளில் பல பிணங்களை பார்க்கிறான் தொடு கிறான். அவன்கூட தினசரி வேலை முடிந்தவுடன் குளித்து விடுகிறான் என்று சொல்ல முடியாது. எனக்கு தெரிந்த பல வெட்டியான்கள் வேலை முடிந்ததும் கிடைக் கும் காசை கொண்டு போய் மது அருந்துவதில் காட்டுகின்ற வேகத் தை குளிப்பதில் காட்டுவதில் லை. இறந்த ஆவி மனிதனை தொடு ம் என்றால் வெட்டியானும் மனி தன் தானே. அவனும் நம்மை போலவே உண்கிறான். உறங்கு கிறான். பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்கிறான். பிணங்களோடு புழங்கும் தனது தொழிலுக்காக பிரத்யோகமாக அவன் எந்த சடங்குகளையும் தின சரி செய்வது கிடையாது. அது அவனால் முடியாது. அதனால் ஆவிகள் மரணம் அடைந்தவுடன் மனிதர்களை தொடரும் என்பதும், தாக்கும் என்பதும் அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல. பொதுவாக இறந்துபோன ஆத்மாக்கள் தங்களது பழைய உடலுக்கு புகுந்து கொள்ளத்தான் ஆர்வம் காட்டுமே தவிர புதிய மனித உடல் களை உடன டியாக விரும்பாது. தனது பழைய உடல் அழிந்து போன பிறகே வேறு உடல்களை ஆத்மாக் கள் தேடுகின்றன. அதுவும் எல்லா ஆத்மாக்களும் அப்படி செய்கிறது என்று சொல்லி விடமுடியாது. ஆயிரத்தில் ஒன்று, இலட்சத்தில் ஒன்று என்று வேண் டுமானால் சொல்லலாம். ஆக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இது காரணம் அல்ல. ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலி ருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமா ன விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும்போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள் ளது. இவைகளை உடனடியாக அப்புறப்படுத் தினால் தான் நமக்கு பாதிப்பு கள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக் கோ நிச்சயம் பாதிப்பு வரு ம். அதனால் தான் சாவுக்கு சென்று வந்த வுடன் குளிக்க வேண்டும் என்றார்க ள். இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வே ண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களா கவும் இருக்கலாம். அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோ ர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையா ன நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரிய மும் கிடைக்கும். இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச் சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிக ளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார் கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

5

0
Edho onnu irukku
Subscribers
41.7K
Total Post
0.9K
Total Views
41.8K
Avg. Views
376.9
View Profile
This video was published on 2022-03-16 10:00:12 GMT by @Edho-onnu-irukku on Youtube. Edho onnu irukku has total 41.7K subscribers on Youtube and has a total of 0.9K video.This video has received 5 Likes which are lower than the average likes that Edho onnu irukku gets . @Edho-onnu-irukku receives an average views of 376.9 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Edho onnu irukku gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Edho onnu irukku