×

FACE NEWSTV's video: :

@இயக்குனர் அமீர் : ஜாபர் சாதிக்குடன் தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன்
உயிர் தமிழுக்கு முன் வெளியீட்டு நிகழ்வும்... பத்திரிகையாளர் சந்திப்பும்... *“குற்றப்பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை” ; தெளிவுபடுத்திய அமீர்* *“இந்த சூழலில் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான்“ ; உயிர் தமிழுக்கு விழாவில் அமீர் வேதனை* *”மதுரையில் பாட்ஷாவாக இருந்தவர் சினிமாவுக்கு வந்தபின் மாணிக்கமாக மாறிவிட்டார்” ; அமீர் குறித்து நெகிழ்ந்த நடிகர் பொன்வண்ணன்* *”ரஜினிக்கு ஏற்பட்ட மாற்றம் போல அமீருக்கும் நிகழும்” ; உயிர் தமிழுக்கு விழாவில் கரு. பழனியப்பன் உறுதி* *”அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள்” ; உயிர் தமிழுக்கு விழாவில் இயக்குநர் ஆதம்பாவா வேதனை* ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குனர் அமீர் பேசும்போது, “என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. . அதன் பிறகு இப்போது வேறு ஒரு பிரச்சனையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. என்னை சுற்றி என்ன நடக்கிறது ? ஒன்றுமே புரியவில்லை. இறைவன் மிக பெரியவன் தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன். அந்த தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.. ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அது தான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ? ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான வரித்துறையினரா ? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்த பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன். #கருபழனியப்பன் #அமீர் #ஜாபர்சாதிக் FACE NEWS TV Touch with us also in :- Websites :- www.facenewstv.com / www.faceinews.com / mathiolicinenews.com You Tube :- FACE NEWS TV MATHIOLI MUSIK Email :- facenewsstv@gmail.com Facebook :- -https://FriendsWhoLikesfaceinews -https://Mathioli Musik Instagram :- -https://@mathiolirajaa LinkedIn :- -https://FACENEWSTV Twitter :- -https://@MathioliRajaa / -https://@FACENEWSTV1 / -https://@thiraideepamgm1 / -https://@MATHIOLICINENEWS FACE NEWS TV OFFICIAL

8

0
FACE NEWSTV
Subscribers
4.5K
Total Post
2K
Total Views
42.4K
Avg. Views
233.2
View Profile
This video was published on 2024-05-06 09:42:49 GMT by @FACE-NEWSTV on Youtube. FACE NEWSTV has total 4.5K subscribers on Youtube and has a total of 2K video.This video has received 8 Likes which are higher than the average likes that FACE NEWSTV gets . @FACE-NEWSTV receives an average views of 233.2 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that FACE NEWSTV gets . Overall the views for this video was lower than the average for the profile.FACE NEWSTV #directorameer #UyirThamizhukku #adhambhava #கருபழனியப்பன் #அமீர் #jaffarsadiq #ஜாபர்சாதிக் #kanjakaruppu #ponvannan #karupalaniappan #tamizhatamizha #vaathamizhavaa #zeetamil #kalaignartv #kavignarsnehan #snehan #lyricistsnehan #biggboss #biggbosstamil #antiindian #pvrinox #pvrinoxpictures #chandhini #chandhinisreedharan #imanannachi #srprabhakaran #directorsrprabhakaran #poetsnehan #politicalsatire #movie #firstlook #launch #pressmeet #controversy #controversial #controversialspeech #tamilnadunews #tamilnadu #tamilnadugovernment #tamilnewslive #livetamilnews #livenews #sathiyamlivenews #newsheadlines #breakingnews #viralnews #fdfs #fdfsreview #fdfsclips #moviereview #movie #review #tamilmoviereview #audience #audiencereview #theatre #theatrereview #audiolaunch #trailerlaunch #tamilmovie #film #filmnews #movie #movienews #cinema #cinemanewsewstv #mathiolicinenews #mathiolimusik #mathiolirajaa #tamilnadu #india #viralshorts #viralvideo #shorts #reels #viralvibes #trending #viral #latest has been used frequently in this Post.

Other post by @FACE NEWSTV