×

K Tamil Tv's video: O P R MemorialTrust

@மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற கண்பார்வையற்ற மாணவிக்கு கல்வி தொகை வழங்கிய /O.P.R MemorialTrust
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த, தற்போது குமாரபாளையத்தில் வசித்துவரும் கரும்பு ஜூஸ் பிழிந்து விற்பனை செய்து ஜீவனம் செய்துவரும் திரு இராமகிருஷ்ணன் அவர்களின் பார்வை இல்லாத மகள் ஆர். காவியா அவர்களுக்கு ஓ. பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக மாநில அளவில் பார்வை இல்லாத மாணவி களில் முதல் மதிப்பெண் பெற்றதை பாராட்டி நினைவு பரிசும், ஊக்க தொகையையும் ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை நிர்வாகி திரு வீ. செல்வராஜூ வழங்கினார். இன்று (21.09.2020) மாணவி ஆர். காவியா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தனது ஒரிஜினல் சான்றிதழ் களை சமர்பிக்க வந்திருந்த போது, தனக்கு செய்து வரும் உதவிகளுக்காக மரியாதை நிமித்தமாக நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை ஜாபர்கான் பேட்டை அறக்கட்டளை அலுவலகத்திற்கு மாணவி ஆர் காவியாவும் அவரது தந்தையும் வருகை தந்திருந்தனர். அது சமயம் மாணவி ஆர்.காவியா அவர்கள் +2 தேர்வில் 600 க்கு 571 மதிப்பெண்கள் பெற்றதற்காக அவரது கல்வி செலவு முழுவதையும் ஏற்கனவே நம் அறக்கட்டளை ஏற்று கொண்டுள்ளதற்காகவும் அவரது தந்தை திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது, "தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் மகளின் மீது அக்கறையுடன் கனிவு காட்டி முழு கல்வி கட்டணத்தை செலுத்தவும், லேப்டாப் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதனை வழங்கியதற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். இதனை தொடர்ந்து மாணவி ஆர். காவியா அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது எனது ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்க ஓ.பி.ஆர். அறக்கட்டளை செய்து வரும் உதவிக்கு திரு.வீ. செல்வராஜூ அவர்களுக்கும் இதர ஓ.பி.ஆர் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் என் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன். நன்றி என்றார். ஓ.பி.ஆர். நினைவு அறக்கட்டளை நிர்வாகி திரு.வீ. செல்வராஜூ மாணவி ஆர். காவியா அவர்களை பாராட்டி பேசும் போது, பார்வை இழந்த நிலையில் சாதனை படைத்ததை பாராட்டுகிறேன். வாழ்வில் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் அதற்கு இந்த அறக்கட்டளை என்றென்றும் உதவி புரியும். இவரை போல் ணாதனை படைக்க துடிப்பவர்களுக்கு ஓ.பி.ஆர் அறக்கட்டளை உதவும். கொரானா காலகட்டத்தில் ஓ.பி.ஆர். அறக்கட்டளையின் சார்பில் ஏறத்தாழ 1500 ஏழை குடும்பங்களுக்கு௹10 லட்சத்திற்கு அதிகமான நிவாரணப் பொருட்கள் இலவசமாக வழங்கபட்டது.+2 படித்த 2600 மாணவ, மாணவிகளுக்கு, அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கானொலி மூலம் நடந்தபட்டது. +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதியான மூன்று ஏழை மாணவ, மாணவிகளுக்கு முழு கல்வி கட்டணத்தை செலுத்த அறக்கட்டளையின் சார்பில் ஒப்பு கொண்டு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறோம். தெலுங்கு மொழி பயிற்சி நடத்த பட்டுள்ளது. 50 ஏழை மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்க, திருச்சி காவேரி மகளிர் கல்லூரி முதல்வரின் வேண்டு கோளை ஏற்று ஐந்து லட்சம் ௹பாய் மதிப்புள்ள 50 செல்போன்கள் இதுவரை வழங்கி இருக்கிறோம். மேலும் ஏழை மக்களுக்கு கல்விச் சேவை செய்து வந்த மறைந்த திருச்சியின் கல்வி காவலர் ஐயா கே. ரெங்கராஜன் (கே.ஆர்.டி.) அவர்களின் நினைவாக தொடங்கப் பட்டுள்ள "KRT CAREER ACADEMY" உள்ளது இதன்மூலம் சமூகத்தில் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெற போட்டி தேர்வை சந்திக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து பயன் பெற வேண்டுகிறோம்.அறக்கட்டளை விதிகளின்படி தகுதி உடையவர்களுக்கு உதவி செய்ய அறக்கட்டளை தயாராக இருக்கிறது. தொடர்புக்கு V செல்வராஜூ oprtrust2020@gmail.com. 9444077722 The Official Tamil TV of KTamil TV latest news Political news, Press Meet, Entertainments, Social Awareness video, Live Talent Show's, News Update, Interview Video,Celebrity Interviews, Public Reviews, Devotional videos, Music video, Kovil Function Video, Best Aanmeegam tamil, Aanmeegam Speech Aanmeegam Tips in Tamil Traditional Music of Tamil If You Like this Video Please Like, Share & Subscribe and Keep Supporting! www.ktamiltv.com https://www.facebook.com/ktamiltv/ https://twitter.com/KTamilChannel https://www.blogger.com/blog/posts/4389457047064314793 https://www.linkedin.com/in/k-tamil-tv-79b7ba93/ https://www.instagram.com/ktamiltv/?hl=en

12

2
K Tamil Tv
Subscribers
5.1K
Total Post
361
Total Views
27.3K
Avg. Views
402
View Profile
This video was published on 2020-09-21 18:58:48 GMT by @K-Tamil-Tv on Youtube. K Tamil Tv has total 5.1K subscribers on Youtube and has a total of 361 video.This video has received 12 Likes which are lower than the average likes that K Tamil Tv gets . @K-Tamil-Tv receives an average views of 402 per video on Youtube.This video has received 2 comments which are higher than the average comments that K Tamil Tv gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @K Tamil Tv