×

KLR - the photo guru's video: Be Hopeful This too shall Pass

@Be Hopeful! This too shall Pass! கலைஞனே! நம்பிக்கையே வாழ்க்கை!..நாளை நமதே!... இதும் கடந்து போகும்!
Be Hopeful! This too shall pass! - தற்கொலை ஒரு தீர்வல்ல! இந்த இருக்கமான வீடியோ உங்களுக்கு பிடித்தமான விடியோவாக இருக்குமா என்று எனக்கு தெரியாது. இருந்தாலும், இன்றைய சூழ்நிலையின் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு இதை உங்களின் பகிர்ந்துகொள்வது சரி என்று நினைக்கிறேன். கும்பகோணம் போட்டோக்ராபர், திரு.ராஜாவின் தற்கொலை..என்னை மிக பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது...திரு ராஜாவை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.. இருந்தாலும் அவரின் இந்த முடிவு என்னை ரொம்பவே பாதித்தது...யோசிக்க வைத்தது... நம் பிறப்பின் நோக்கம் வாழ்வதில் இருக்க வேண்டும்..என்பது என் தனிப்பட்ட கருத்து. தனி மனித தற்கொலை, அவர் சார்ந்திருக்கும் குடும்பத்துக்கு மிக பெரிய சிக்கலையும் சவாலையும் உருவாக்கிவிடும் என்பதை ஒவொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மேலாக...ராஜாவின் தற்கொலை செய்தியின் face book பதிவில், இன்னொரு போட்டோக்ராபர் "நண்பா நீ என்னை முந்திக்கொண்டாய்...விரைவில் நானும் நீ சென்ற இடத்துக்கு வருவேன்..." என்று பதிவிட்டு இருந்தார். இருந்தாலும், இந்த கரடு முரடான வாழ்க்கை பயணத்தில், ஒருபோதும் தற்கொலை பற்றி நான் சிந்தித்ததே இல்லை. ஏன்எனில் என்னை பொறுத்த வரை பிறப்பும் வாழ்வும் ஒரு வரம். அதை நாம் தவமாய் செய்யவேண்டும் என்பதில் உறுதியை இருக்கிறேன். தடைகள் இல்லை எண்ணில் மாற்று சிந்தனைகளும், முன்னேற்றமும் இல்லை. எப்படி என் வாழ்வின் ஒவ்வொரு காலத்திலும், பிரச்சினைகளின், ஆழத்தை உணர்ந்து, எண்ண மாற்றங்களையும், செயல் மாற்றங்களையும் செய்ய முயன்றேனோ அது போல உங்களின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள். 'உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு' என்ற கண்ணதாசனின் வரிகள் நான் எவ்வளவு ஆசிர்வதிக்க பட்டவன் என்பதை தினம்தோறும் நினைவூட்டும். இந்த நிரந்தரமில்லா எந்த பிரச்சனையையும் நம் போட்டோக்ராபர்ஸ் சரியாக எதிகொள்ள வேண்டுமெனில், ..! தனிமையை தவிருங்கள் - தனிமை தான் தற்கொலைக்கு தாய். - நம்பகரமான நண்பர்கள், மனைவி, மக்கள், உங்கள் நாள் விரும்பும் சொந்தங்களுடன் எப்போதும் இணைத்து இர்ருங்கள். பிரச்சனைகளை நம்பிக்கை மாணவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்...முடிந்தால் மனைவி இடம் முகம் புதைத்து கொஞ்சம் அழுவது கூட தப்பில்லை. மனதை பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி லேசாக வைத்திருங்கள்...பிடித்த இசை கேளுங்கள், புத்தகம் படியுங்கள், உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்யுங்கள்...ஏன் கோசம் லோங் டிரைவ் கூட பொய் வரலாம். இறை நம்பிக்கை இருந்தால், பிரச்சினைகளை அவன் பார்த்துக்கொள்ளுவான் என்று அடுத்த நிலைக்கு நகருங்கள். - போட்டோகிராபி குறித்த சரியான புரிதல் கொள்ளுங்கள்.. முக்கியமா, நம் தேவைக்கு அதிகமான அல்லது பொருந்தாத கேமெராக்கள் மற்றும் இதர ஒளிப்பட பொருட்களை கடனில் வாங்கினால், திருப்பி கட்ட முடியுமா என்று யோசித்து வாங்க வேண்டும். - படமெடுப்பதையும் தாண்டி, வியாபார ரீதியான அறிவையும் அனுபவத்தையும் வளர்த்து கொள்ளுங்கள். - புது முயற்சிகள் எதுவுமே இல்லாமல் ஒரேமாதிரி வேலை செய்வதை விட்டுட்டு மாற்றி யோசிக்க தயார் ஆகுங்கள்.. - வாழ்க்கையின் எதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல், வெறும் கற்பனையில் வாழ்வதை தவிர்த்திடுங்கள். - பெரிய பிரச்சினைகள் வரும் போது, மாற்று வழிகளை சிந்திக்காமல், எதோ இது நமக்கு மட்டும் தான் நடக்குது என்று சோர்ந்து போய் முடங்கி விடாதீர்கள். - equipment அப்டேட் என்பதில் செலுத்திய கவனம் மற்றும் பணத்தில் குறைந்தது 20% ஆவது தனிமனித மேம்பாடு, வாழ்வியல் அப்டேட் க்கு செலவிடவேண்டும். மேலே சொன்ன என்னுடைய பிரச்சினைகளை எல்லாம் நான் இப்படித்தான் எதிர்கொள்ளுகிறேன். கும்பகோணம் போட்டோக்ராபர், திரு.ராஜாவின் தற்கொலை முதலும் முடிவாகவும் இருக்கட்டும். எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு புதிதாய் யோசிப்போம்.. நம்பிக்கையே வாழ்க்கை!..நாளை நமதே!... இதும் கடந்து போகும்!.. என நாம் படித்தது எல்லாம் நமக்கு தான். தைரியமாக, தன் நம்பிக்கையுடன் எதிர் நீச்சல் போடுவோம்..! நாம் தழுவ வேண்டியது வாழ்க்கையை.... மரணத்தை அல்ல..! வாழ்க வளமுடன்.

411

252
KLR - the photo guru
Subscribers
101K
Total Post
343
Total Views
412.9K
Avg. Views
5.6K
View Profile
This video was published on 2020-05-30 18:46:47 GMT by @KLR---the-photo-guru on Youtube. KLR - the photo guru has total 101K subscribers on Youtube and has a total of 343 video.This video has received 411 Likes which are higher than the average likes that KLR - the photo guru gets . @KLR---the-photo-guru receives an average views of 5.6K per video on Youtube.This video has received 252 comments which are higher than the average comments that KLR - the photo guru gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @KLR the photo guru