×

Kalaignarist கலைஞரிஸ்ட்'s video: 1980 200

@1980 எம்ஜிஆர் ஆட்சியில் நடந்த கொலைக்காக சுமார் 200கி.மீ நடந்து சென்று நீதி கேட்ட கலைஞர் | கலைஞரிஸ்ட்
1980 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நடந்த #எம்ஜிஆர்-ன் #அதிமுக ஆட்சியில் #திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியம் பிள்ளை, தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் திருச்செந்தூர் கோயிலில் நடந்த உண்டியல் முறைகேடு குறித்து, அரசிடம் புகார் செய்யததால் அவர் கொலை செய்யப்பட்டதாக கலைஞர் குற்றஞ்சாட்டினார். கலைஞர் தந்த அழுத்தத்தின் காரணமாக இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் விசாரணை ஆணையத்தை எம்ஜிஆர் அமைத்தார். இந்த ஆணையம் விசாரணை நடத்தி 288 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எம்ஜிஆரிடம் அளித்தது. இந்த அறிக்கையை சட்டபேரவையில் வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் எம்ஜிஆரின் அதிமுக அரசு அதை வெளியிடவில்லை. இதையடுத்து விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் வெளியிட்டார். கலைஞர் கையில் அறிக்கை கிடைத்தது எப்படி.? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. நீதிபதி சி.ஜே.ஆர்.பால் ஆணைய அறிக்கையில் திருச்செந்தூர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணியம் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கலைஞர் முன் வைத்தார். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அன்றைய தினமே மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு சுமார் 200 கி.மீ நடைபயணமாக செல்வேன் என அறிவித்தார் கலைஞர். ஆனால் எம்ஜிஆரின் அதிமுக அரசு அசைந்து கொடுக்காததால் திட்டமிட்டபடி நீதி கேட்டு நெடும் பயணத்தை 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி மதுரையிலிருந்து கலைஞர் நடக்க தொடங்கினார். ஓய்வின்றி நடந்ததால் கலைஞரின் கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்ட போதும் பொருட்படுத்தாமல் 8 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி திருச்செந்தூரை அடைந்தார் கலைஞர். பிப்ரவரி 22 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேராசிரியரின் வேண்டுகோளை ஏற்று இருக்கையில் அமர்ந்தவாறு பேசினார் கலைஞர். கலைஞரின் #நீதி_கேட்டு_நெடும்_பயணம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நடைபயணமாக கருதப்படுகிறது. இதனால் ஆளும் அதிமுக கட்சிக்கும், எம்ஜிஆருக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட கலைஞரின் "நீதி கேட்டு நெடும்பயணம்" காரணமாக அமைந்தது. #திருச்செந்தூர் #நீதிகேட்டுநெடும்பயணம் #கலைஞர் #கருணாநிதி #கலைஞர்_கருணாநிதி #திராவிடம் #திராவிடமுன்னேற்றக்கழகம் #திமுக #திமுக_தலைவர் #திமுகதலைவர்_கருணாநிதி #கலைஞர்_புகழஞ்சலி #கலைஞரிஸ்ட் #திமுக_பாடல்கள் _Karunanidhi Visit to Like Our Other Sites Facebook Page : https://www.facebook.com/kalaignarist/ Twitter : https://mobile.twitter.com/kalaignarist Instagram : https://www.instagram.com/kalaignarist1924/ Blogger : https://kalaignarist1924.blogspot.com/

108

4
Kalaignarist கலைஞரிஸ்ட்
Subscribers
75.3K
Total Post
256
Total Views
478.9K
Avg. Views
6.6K
View Profile
This video was published on 2020-04-24 07:30:34 GMT by @Kalaignarist-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D on Youtube. Kalaignarist கலைஞரிஸ்ட் has total 75.3K subscribers on Youtube and has a total of 256 video.This video has received 108 Likes which are lower than the average likes that Kalaignarist கலைஞரிஸ்ட் gets . @Kalaignarist-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D receives an average views of 6.6K per video on Youtube.This video has received 4 comments which are lower than the average comments that Kalaignarist கலைஞரிஸ்ட் gets . Overall the views for this video was lower than the average for the profile.Kalaignarist கலைஞரிஸ்ட் #எம்ஜிஆர்-ன் #அதிமுக #திருச்செந்தூர் #நீதி_கேட்டு_நெடும்_பயணம் #திருச்செந்தூர் #நீதிகேட்டுநெடும்பயணம் #கலைஞர் #கருணாநிதி #கலைஞர்_கருணாநிதி #திராவிடம் #திராவிடமுன்னேற்றக்கழகம் #திமுக #திமுக_தலைவர் #திமுகதலைவர்_கருணாநிதி #கலைஞர்_புகழஞ்சலி #கலைஞரிஸ்ட் #திமுக_பாடல்கள் #NenjukkuNeethi #NenjukkuNeedhi #Kalaignarist #Kalaignar #Karunanidhi #Kalaignar_Karunanidhi #dmk #dmksongs Visit has been used frequently in this Post.

Other post by @Kalaignarist %E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D