×

Aalum Sizeum's video: Keelanelli health benefits in tamil

@கீழாநெல்லி சாப்பிடும் முறை மருத்துவ பயன்கள் Keelanelli health benefits in tamil மஞ்சள் காமாலை குணமாக
#கீழாநெல்லி கீழாநெல்லி சாப்பிடும் முறை: 1. கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். 2. கீழா நெல்லியை அரைத்து அப்படியே சாறாக்கி குடிக்கலாம். 3. இதை முடக்கத்தான் போன்று தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம். 4. கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். 5. வெந்நீரில் கலந்து குடிக்கலாம். 6. கீழாநெல்லி வேரை மண் போக சுத்தம் செய்தும் பசும்பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம். 7. கீழாநெல்லி இலை, காய், வேர் இவை அனைத்தையும் பொடித்து பயன்படுத்தலாம். 8. கீழாநெல்லி இலை கிடைக்கவில்லை என்றால் கீழாநெல்லி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம். கீழாநெல்லி மருத்துவ குணங்கள்: 1. மஞ்சள் காமாலை - கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். அதிக கசப்பு என்று நினைப்பவர்கள் கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து சிட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். நீர்மோரில் இந்த விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும். மஞ்சள் காமாலை என்பது மருத்துவ விளக்கத்தின் படி ஒரு நோய் அல்ல. உடலில் கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்பதை தெரியப்படுத்தும் ஒரு அறிகுறி தான். கல்லீரலில் பிரச்சினை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. மது அருந்துதல், பசிக்கு உணவு உண்ணாதிருத்தல், அதிகம் கார உணவுகள் உண்ணுதல் போன்றவையால் கல்லீரல் தன்னுடைய திறனுக்கு அதிகப்படியாக உழைத்து உழைத்து தளர்ந்து விடுகிறது. மேற்கொண்டு தனது கடமையை செய்ய முடியாமல் தவிக்கிறது. கல்லீரல் பிரச்சினை தோன்றும் போது, ரத்தத்தில் உள்ள சிவப்பணு சிதைந்து பிலுருபின் என்ற மஞ்சள் நிறக்கூறு அதிகரித்தால் உடலில் மஞ்சள் நிறம் பரவ ஆரம்பிக்கும். கண் மஞ்சளாகும் மற்றும் பார்வை மங்கலாகத் தோன்றும். அதிகப்படியான சோர்வு, அடி வயிற்றில் வலி, எடை குறைவு, வாந்தி, உடலில் அரிப்பு, அடர் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேற்றம், காய்ச்சல் போன்ற பலவகையான பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாக அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான வேலையும் செய்ய முடியாமல் அவதிப்படுவார்கள். கண்டிப்பாக தேவையான மருந்துகள் உட்கொள்ளுவதோடு நல்ல ஓய்வும் அவர்களுக்கு தேவை. கீழாநெல்லி பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். அதனை தயிரிலோ, மோரிலோ, பாலிலோ அல்லது தேனிலோ கலந்து இரண்டு வேளையும் குடித்து வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மேலும் இந்த மருந்து கணையத்தின் இயக்கத்தை சரியாக்கும். பித்த வாந்தி வந்தால், இந்த மருந்து விரைவில் சரியாக்கும். கல்லீரைலை சுத்தம் செய்யும். உடல் உள்ளுறுப்புகளை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அவ்வபோது வெளியேற்றவும் கல்லீரல் கோளாறுகள் உண்டாகாமல் இருக்கவும் கீழாநெல்லி சாறு குடிக்கலாம். மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியவர்கள் 30 மிலி அளவிலும், சிறுவர்கள் 15 மிலி அளவிலும் குடித்துவந்தால் கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேறும். கல்லீரல் பாதிப்பிலிருந்து எப்போதும் நம்மை பாதுகாப்பாக வைக்க கீழாநெல்லி உதவும். 3. பித்தப்பை கல் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி குடித்து வந்தால் பித்தப்பை கல் நீங்கும். 4. சிறுநீரக கற்கள் நீங்க மற்றும் சிறுநீரக பாதையை சுத்தம் செய்ய- கீழாநெல்லியை சுத்தம் செய்து அதில் மூன்றுமடங்கு அளவு நீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நீர் ஒருபங்காக சுண்டியது அதை குடித்துவரவேண்டும். தினமும் ஒரு டம்ளர் அளவு இதை குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும். நச்சுகள் நீங்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். எல்லோரும் குடிக்கலாம். மாதம் இருமுறை இப்படி குடித்துவருவது நல்லது. 5. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க - தினமும் எதோ ஒரு வேளை உணவுக்கு முன்பு கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு எடுத்துவந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும். 6. வெள்ளைப்படுதல், உடல் உஷ்ணம், வயிற்றில் புண், வாயில் புண் போன்றவற்றை உணர்ந்தால் கீழாநெல்லி இலையை அரைத்துவிழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் அளவு கலந்து இலேசாக உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுபுண் குணமாகும். வயிற்று கோளாறுகள் நீங்கும். 7. தலை உஷ்ணத்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருப்பவரள் கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வு சட்டென்று நிக்கும். உடலில் சரும வியாதிகள் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் ஓடிவிடும். Phyllanthus Niruri Bhoomi Amla Powder health benefits How to clean your liver and keep your liver healthy Liver healthy foods How to cure fatty liver

63

2
Aalum Sizeum
Subscribers
85.6K
Total Post
456
Total Views
112.3K
Avg. Views
1.2K
View Profile
This video was published on 2021-09-29 17:18:22 GMT by @LEARN-EVERYTHING on Youtube. Aalum Sizeum has total 85.6K subscribers on Youtube and has a total of 456 video.This video has received 63 Likes which are higher than the average likes that Aalum Sizeum gets . @LEARN-EVERYTHING receives an average views of 1.2K per video on Youtube.This video has received 2 comments which are lower than the average comments that Aalum Sizeum gets . Overall the views for this video was lower than the average for the profile.Aalum Sizeum #கீழாநெல்லி கீழாநெல்லி has been used frequently in this Post.

Other post by @LEARN EVERYTHING