×

MY MUSIC's video: Hit Comedy Scenes

@செந்தில் கவுண்டமணி காமெடி கலாட்டா... #மிஸ் பண்ணாம இந்த காமெடியை கடைசிவரை பாருங்க # Hit Comedy Scenes
செந்தில் கவுண்டமணி காமெடி கலாட்டா... #மிஸ் பண்ணாம இந்த காமெடியை கடைசிவரை பாருங்க # Hit Comedy Scenes செந்தில் (பிறப்பு: மார்ச் 23, 1951), தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[1][2] இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவரை இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை. கவுண்டமணி (பிறப்பு: மே 25, 1939) ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு. கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்[1] மே 25, 1939 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார். துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது. இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.

14

0
MY MUSIC
Subscribers
519K
Total Post
1.8K
Total Views
162.5K
Avg. Views
1.9K
View Profile
This video was published on 2021-02-01 10:26:37 GMT by @MY-MUSIC on Youtube. MY MUSIC has total 519K subscribers on Youtube and has a total of 1.8K video.This video has received 14 Likes which are lower than the average likes that MY MUSIC gets . @MY-MUSIC receives an average views of 1.9K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that MY MUSIC gets . Overall the views for this video was lower than the average for the profile.MY MUSIC #மிஸ் # has been used frequently in this Post.

Other post by @MY MUSIC