×

Nikil Videos's video: - Nikkils Channel

@பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம் - கரோனா விழிப்புணர்வு பாடல் | Nikkils Channel
இசையமைப்பாளர் இனியவன் படைப்பில் உருவாகியிருக்கும் கரோனா விழிப்புணர்வு பாடல் – ‘பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்’உலகையே ஸ்தம்பிக்க வைத்து, கண்ணுக்கு தெரியாமல் பெரும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடலை, தானே எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் இனியவன்.‘கௌரி மனோகரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இனியவன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால், சிறுவயது முதலே பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர். தனது கடுமையான உழைப்பினால், முதல் படத்திலேயே கவிஞர் வைரமுத்துவுடன் ஒரு தொழில்முறை நெருக்கத்தை எற்படுத்திக் கொண்ட இனியவன், கவிஞர் வைரமுத்து வரிகளில், எஸ். பி. பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி, சித்ரா உள்ளிட்ட பல்வேறு பாடகர்களின் குரலில் பல நல்ல பாடல்களை படைத்திருக்கிறார்.2004ம் ஆண்டு முன்னாள் முதலைமைச்சர் டாக்டர் கலைஞர் முன்னிலையில், கவிஞர் வைரமுத்துவின் ‘கவிதையே பாடலாக – 1’ என்ற பாடல் தொகுப்புக்கு இனியவன் மேடையிலேயே இசையமைத்து பாடல்களை அரங்கேற்றிய விதம் அவருக்குப் பெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, 2007ம் ஆண்டு கவிதையே பாடலாக – 2ம் தொகுப்பு மற்றும் அதே ஆண்டில் ‘சுனாமி பாடல் தொகுப்பு’ உள்ளிட்ட படைப்புகள், 2009ம் ஆண்டில் சுதா ரகுநாதன் குரலில், கவிஞர் வைரமுத்து வரிகளில் இவர் வெளியான ‘கல்லறைப் பாடல்’ பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 2000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், பல்வேறு சர்வதேச இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். இந்த இக்கட்டான ஊரடங்கு நேரத்திலும் கரோனா விழிப்புணர்வு பாடலை, எழுதி, இசையமைத்து, பாடி, பகிர்ந்திருப்பது மிகுந்த வரவேற்புக்கு உரியது.Music Composer Iniyavan creates Corona Awareness song - ‘Bayam Vendam Thozha Bayam Vendam’Music Composer Iniyavan has written, composed and sung a song to create the much needed awareness about the deadly Corona Virus that has literally paralyzed this whole world. Iniyavan, who made his debut in Tamil cinema through the film 'Gauri Manohari' hails from a small village in Tanjore district, Tamil Nadu. His passion for music, made him participate in various concerts since his childhood.Through his hard work and dedication, he gained the confidence and good working relationship of Kavignar Vairamuthu. In his composition, veteran singers like S. P. Balasubramaniam, KJ Yesudas, S Janaki and Chitra have sung many songs for the lyrics penned down by Kavignar Vairamuthu.In 2004, in the presence of Former Chief Minister Dr Kalaignar, his composition for Kavignar Vairamuthu’s Poem Collection ‘kavithaiye Paadalaaka - 1’, was well received and appreciated for his on stage composition and orchestration skills. Subsequently, in the year 2007, Kavignar Vairamuthu’s ‘Kavithaiye Paadalaaka – 2’ poem collection also brought him accolades besides Tsunami Song Collection that was released in the same year. In 2009, he composed an elegy sung by Veteran Carnatic Vocalist Sudha Raghunathan penned down by Kavignar Vairamuthu that was a global soul stirrer. He has composed over 2000 songs and has conducted various international concerts. Right now, during this tumultuous curfew, this Corona Awareness song, written, composed and sung by him was well received.பாடல் இயற்றியவர் : இனியவன்இசையமைப்பாளர்பல்லவிபயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்கொரோனா வந்து துரத்தியடிப்பதால் யாரையும் தொடவெண்டாம்பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்கொரோனா வந்து துரத்தியடிப்பதால் யாரையும் தொடவெண்டாம்சத்தம் இல்லாமல் நீயும் எங்களை தின்றாலும்மௌனமாகவே நீயும் வந்து கொன்றாலும்எங்கள் இரத்தம் மண்ணில் வீழாதேதமிழன் சத்தம் என்றும் ஓயாதேபயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்தொடவெண்டாம் யாரையும் தொடவெண்டாம்சரணம் 1எங்கள் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு எப்படி வந்தாய் கொரோனாஎங்கள் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு எப்படி வந்தாய் கொரோனாபட்ட பாடெல்லாம் பாழாய் போச்சேஎன்ன பண்ணபோறோம் தெரியலையேசெத்த சாவிலே ஒன்னாகூடிசொல்லி அழவும் வழியில்லையேமரணம் கொடியது சாமிமௌனம் காக்குது சாமிதமிழா தமிழா பயம் வேண்டாம்சாதிக்கப் பிறந்தவன் நீசாதியை ஒழிக்க சரித்திரம் பிறக்ககொரோனாவை நீ விரட்டி அடிசரணம் - 2சதியே சதியே பயந்து நடுங்கியே கண்ணீர் வடிக்குது தேசம்சதியே சதியே பயந்து நடுங்கியே கண்ணீர் வடிக்குது தேசம்அண்டை நாட்டிலே எங்கள் தமிழன்அழுது புலம்பி தவிக்கிறான்சொந்த ஊரிலே சோறு இல்லாமல்தூக்குப்போட்டு சாகிறான்என்ன பாவம் நாங்கள் செய்தோம் - இனிஎங்கே போய் நாங்கள் அழுவோம்ஒடிவிடு நீ ஓடிவிடுகண்ணுக்கு திெயாமல் ஓடி விடுவாழவிடு நீ வாழவிடு - எங்கள்தேசம் காக்க வாழவிடு. Follow us @ Twitter : https://twitter.com/onlynikil Follow us @ Instagram : https://www.instagram.com/onlynikil/ Like us @ Facebook : https://www.facebook.com/nikkilspage/ Subscribe us @ : https://www.youtube.com/user/Nikhilschannel/videos

1

0
Nikil Videos
Subscribers
111K
Total Post
1.1K
Total Views
73K
Avg. Views
1.3K
View Profile
This video was published on 2020-04-10 23:29:50 GMT by @Nikil-News23 on Youtube. Nikil Videos has total 111K subscribers on Youtube and has a total of 1.1K video.This video has received 1 Likes which are lower than the average likes that Nikil Videos gets . @Nikil-News23 receives an average views of 1.3K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Nikil Videos gets . Overall the views for this video was lower than the average for the profile.Nikil Videos #CoronaVirusIndia #StayHomeStaySafe #IndiaFightsCorona #BreaktheChain இசையமைப்பாளர் has been used frequently in this Post.

Other post by @Nikil News23