×

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்'s video: 5

@உங்கள் கோழிக்கு அம்மை நோயா .. கவலை வேண்டாம் இந்த ஒரு வீடியோ போதும் / 5 வழிமுறைகள் ?? கோழி அம்மை
கோழிகளுக்கு தாக்க கூடிய அம்மை நோய் பற்றியும் தடுப்பு முறைகள் பற்றியும் தெளிவான தகவல் கொண்ட வீடியோ பதிவு : கோழி அம்மையானது மெதுவாகப் பரவக்கூடிய, அதிகமாகக் காணப்படும், மெதுவாகப் பரவும், வைரஸால் ஏற்படக்கூடிய தொற்று நோயாகும். கோழிகளின் உடலில் இறகுகள் இல்லாத இடங்களிலும், சுவாச மண்டலத்தின் மேற்பகுதியிலும், சீரண மண்டலத்தின் மேற்பகுதியிலும் உள்ள உட்சவ்வுகளில் கொப்புளங்கள் தோன்றும். இந்ந நோய் எல்லா வயதான கோழிகளையும் பாதிக்கும். இந்நோய் தாக்கிய கோழிகளில் எடை அதிகரிப்பது குறைதல், முட்டை உற்பத்தி குறைதல், இறப்பு போன்றவை ஏற்படுவதால் இது ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் மனிதர்களுக்கு பரவுவதில்லை. காரணங்கள் : பொதுவான கிருமி நீக்க செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் திறன் வாய்ந்த ஏவி பாக்ஸ் எனும் வைரஸால் கோழி அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் கோழி அம்மை ஏற்பட்ட கோழிகளின் புண்களில் இருந்து உதிரும் தோலில் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும். புண்கள் அல்லது சிராய்ப்புகள் இல்லாத தோலை இந்த வைரஸ் ஊடுருவாது. எனவே இந்த வைரஸ் கோழிகளின் உடலினுள் செல்வதற்கு தோலில் சிராய்ப்புகள் தேவை. இந்த சிராய்ப்புகள் அல்லது புண்கள் வழியாக இவை உட்சென்று நோயினை ஏற்படுத்துகின்றன. நேரடித் தொடர்பு மூலமாகவும், நோய்க்கிருமிகளால் அசுத்தமடைந்த மண், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வழியாக இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் பரவுகிறது. அசுத்தமடைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளில் இந்த வைரஸ் காற்று வழியாக எளிதில் பரவும். பாதிக்கப்பட்ட கோழிகளின் சுவாச மண்டலத்திலிருந்து வைரஸ் வெளியேறி காற்று வழியாக பரவும். கோழிகளுக்குத் தடுப்பூசி போடும் போது, தடுப்பூசி அளிப்பவர்கள் மூலம் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளிலிருந்து நோயற்ற கோழிகளுக்கு இந்நோய் பரவுகிறது. கண்களில் இந்த வைரஸ் நுழைந்தால், லேக்ரிமல் குழாய் வழியாக மூச்சுக்குழலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். மழை மற்றும குளிர்காலங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை, மற்றும் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை ஒரு இடத்தில் பராமரித்தல் போன்ற காரணங்களால் இந் நோய் அதிகமாகக் காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு இந்நோய் நீடிப்பதால், பல்வேறு வயதுகளில் கோழிகள் ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் போது தடுப்பூசி அளித்திருந்தாலும் அந்தப் பண்ணைகளில் நோயின் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும். நோய் அறிகுறிகள் : இந்நோய் இரண்டு விதமாக வெளிப்படும். ஒரு நிலையில் தோல் பாதிக்கப்படும். மற்றொரு நிலையில் சுவாச மற்றும் சீரண மண்டலத்தின் உட்சவ்வுகள் பாதிக்கப்படும். முட்டையிடும் கோழிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அவற்றில் எடை அதிகரிப்பது குறைதல், முட்டை உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். தோல் பாதிக்கப்படும் போது, கோழிகளின் கொண்டை, தாடி, கண் இமை, நாசித்துவாரம், அலகுகள் இரண்டும் இணையும் பகுதி, மற்றும் இதர இறகுகளற்ற பகுதிகளில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றி அவை புண்களாக மாறும். கண்களில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றுவதால் கண் பார்வை பாதிக்கப்படும். மேலும் இதனால் கோழிகள் தீவனம் மற்றும் தண்ணீர் எடுப்பதும் பாதிக்கப்படும். பேப்யூல், வெசிக்கில், பஸ்டியூல், பக்கு உருவாதல், தழும்பு உருவாதல் என்ற வரிசையில் நோய் அறிகுறிகள் தோன்றும். தோல் மற்றும் பாதிக்கப்பட்ட கோழிகளில் இறப்பு விகிதம் 2% மட்டுமே இருக்கும். வாய், மூச்சுக்குழல், உணவுக்குழாய் போன்ற பகுதிகளில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். பிறகு இந்தக் கொப்புளங்கள் மஞ்சள் நிறத்தில் மாறி, மேற்கூறிய உறுப்புகளில் அடைப்பினை ஏற்படுத்தும். இதனால் கோழிகள் தீவனம் எடுப்பது குறைதல், மூச்சு விட சிரமம், 50% கோழிகளில் இறப்பு போன்றவை ஏற்படும். நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் உடலில் காணப்படும் அறிகுறிகள் நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் கொப்புளங்கள் தோன்றும். முதலில் கொப்புளம் பெரியதாகி, மஞ்சள் நிற சீழ் போன்ற பக்குகள் தோன்றும். நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் இரண்டு விதமான தடுப்பூசிகள் கோழி அம்மை நோயினைத் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒன்று புறா அம்மை மற்றும் கோழி அம்மைத் தடுப்பூசி. புறா அம்மை தடுப்பூசி, கோழிகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இது இறக்கையில் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் மூலம் கோழிகளுக்கு 6 மாதம் வரை கோழி அம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி கோழிகளுக்கு கிடைக்கிறது. இதனால் கோழிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை கோழி அம்மைக்கான தடுப்பூசியினை அளிக்க வேண்டும். கோழி அம்மைத் தடுப்பூசியினை கோழிகளில் 6-8 வார வயதில் கொடுக்கும் போது சதைப்பகுதியிலோ அல்லது இறக்கைப் பகுதியிலோ கொடுக்க வேண்டும். தடுப்பூசி முறையாக அளிக்கப்பட்டிருப்பதை பரிசோதிக்கக் கோழிகளுக்கு தடுப்பூசி அளித்து 7-10 நாட்கள் கழித்து தடுப்பூசி அளித்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டு பிறகு அதன் மீது தோல் உறிந்து காணப்படும். மேற்கூறியவாறு தடுப்பூசி போட்ட இடத்தில் இல்லாவிடில், தடுப்பூசி முறையாக செயல்படவில்லை அல்லது முறையாக தடுப்பூசி அளிக்கப்படவில்லை அல்லது தாயிடமிருந்து அம்மை நோய்க்கான எதிர்புரதங்கள் குஞ்சுகள் பெற்றிருக்கின்றன என்று அர்த்தம். இவ்வாறு இருக்கும் போது மீண்டும் ஒரு முறை கோழிகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும். நோய்க்கிளர்ச்சியின் போது 30%க்கும் குறைவான கோழிகள் பண்ணையில் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவைகளைத் தனியாகப் பிரித்து விட்டு, மீதியிருக்கும் நோயற்ற கோழிகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசியினைப் போட வேண்டும். அம்மை நோயினைக் கட்டுப்படுத்த பண்ணையில் முறையான சுகாதார முறைகளையும், கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும். கோழிப்பண்ணையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சோடியம் ஹைட்ராக்சைடு (1:500), கிரெசால் (1;400) மற்றும் பீனால் (3%) என்ற அளவில் கிருமி நாசினிகளை உபயோகப்படுத்தி கிருமி நீக்கம் செய்யவேண்டும் .. #கோழிஅம்மைநோய், #கோழிஅம்மை, #அம்மைநோய், #நாட்டுக்கோழிகளுக்குஅம்மைநோய்,

1.4K

190
Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்
Subscribers
1M
Total Post
0.9K
Total Views
2.4M
Avg. Views
48.5K
View Profile
This video was published on 2020-11-21 11:08:29 GMT by @Vivasaya-Ulagam---%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d on Youtube. Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம் has total 1M subscribers on Youtube and has a total of 0.9K video.This video has received 1.4K Likes which are higher than the average likes that Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம் gets . @Vivasaya-Ulagam---%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d receives an average views of 48.5K per video on Youtube.This video has received 190 comments which are lower than the average comments that Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம் gets . Overall the views for this video was lower than the average for the profile.Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம் #கோழிஅம்மைநோய், #கோழிஅம்மை, #அம்மைநோய், #நாட்டுக்கோழிகளுக்குஅம்மைநோய், has been used frequently in this Post.

Other post by @Vivasaya Ulagam %e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af %e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d