×

Vivekananda Homeo Clinic & Psychologist Counseling's video: Hypo mania

@ஹைப்போ மேனியா Hypo mania மகிழ்ச்சியான மன நிலையிலிருந்து திடீரென எரிச்சலுடன் கோபம்.
ஹைப்போ மேனியா எனப்படும் மனப்பற்று நோய் மேனியா Mania எனப்படுவது ஒரு வகை மன நோய் .இந்த நோயின் ஒரு நிலைதான் ஹைப்போ மேனியா Hypo mania. சில வேளைகளில் இது டிப்ரஷன் Depression எனப்படும் மன அழுத்தத்தோடு மாறி மாறி வருவதாக இருக்கலாம். அப்போது அது Bipolar Disorder எனப்படும் இருவகையான செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும். டிப்ரஷன் Depression என்றால் மன அழுத்தம் என்பதைக்குறிக்கும்.. ஹைப்போமேனியா Hypomania என்பது அதற்கு எதிரான பல அறிகுறிகளைக் கொண்ட நோயாகும். அறிகுறிகள் Ø இந்த நோய் ஏற்பட்டவர்கள் தங்களைப் பற்றி உயர்வான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். Ø அளவுக்கதிகமாக தொடர்ச்சியாக பேசுவார்கள். Ø எண்ண ஓட்டம் மிக வேகமாக இருக்கும். Ø தொடர்ச்சியாக பேசினாலும் திடீர் திடீரென பேசுகின்ற விஷயங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதனால்அவர்கள் தொடர்ச்சியாக பேசினாலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத விஷயங்களயே பேசுவார்கள். Ø மகிழ்ச்சியான மன நிலையிலிருந்து திடீரென மாற்றங்கள் ஏற்பட்டு எரிச்சலுடன் இருப்பது, கோபம், மற்றும் விரோதத்தண்மையுடன் காணப்படுவார்கள். Ø தன் மீது கொண்ட அளவுக்கதிகமான தன்னம்பிக்கையினால் பல விதமான வேலைகளைத் தொடங்குவார்கள்.ஆனால் எந்த வேலையையும் சரியாக முடிக்காமல் இடையிலே விட்டு விட்டு அடுத்த வேலையைத் தொடங்கி விடுவார்கள். Ø இருக்கிற வீட்டை விட நல்ல வீடு வேண்டும் என்று வீட்டை இடித்து விட்டு கடைசியில் ஒரு வீடுகூட இல்லாமல் இருக்குமளவுக்கு இவர்களின் நடவடிக்கை இருக்கலாம். Ø செக்ஸில் அளவுக்கதிகமான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் Ø அதிகரித்த உடல் ஆற்றல் மற்றும் குறைவான தூக்கம். Ø உடுத்துகிற உடைகள் பளீச்சென்று எல்லோருக்கும் தெரிவதாக அணிவார்கள். Ø அளவுக்கதிகமான அலங்காரம் செய்து கொள்வார்கள். Ø விவேகமின்மை. Ø ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் உபயோகப்படுத்துதல். Ø ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முற்பட்டு எந்த வேலையையும் முடிக்க மாட்டார்கள். Ø நம்பத்தகாத நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். Ø இவர்களின் தொடர்ச்சியாக பேசும் ஆற்றல் காரணமாக அவர்கள் குறி அல்லது சோதிடம் சொல்வதாக கூறிக்கொள்வார்கள். Ø ஆடம்பரமான செலவுகள் அதிக்ம் செய்து, பொறுப்பற்ற நடத்தையுடன் செயல்படுவார்கள் Ø பாலியல் மனக்கிளர்ச்சி. அதிகமாக இருக்கும் சிகிச்சை தகுந்த உளவியல் ஆலோசனை மற்றும் நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனலிக்கும். எனவே தகுதிவாய்ந்த உளவியல் ஆலோசகர் மற்றும் ஹோமியோபதி மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

0

0
Vivekananda Homeo Clinic & Psychologist Counseling
Subscribers
210K
Total Post
852
Total Views
471.7K
Avg. Views
6.4K
View Profile
This video was published on 2024-03-06 19:50:24 GMT by @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center on Youtube. Vivekananda Homeo Clinic & Psychologist Counseling has total 210K subscribers on Youtube and has a total of 852 video.This video has received 0 Likes which are lower than the average likes that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center receives an average views of 6.4K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Vivekananda Homeo Clinic & Psychological Counseling Center