×

Vivekananda Homeo Clinic & Psychologist Counseling's video: -

@பால் வினை நோய் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் -
பாலியலால் பரவும் நோய்கள் (SEXUALLY TRANSMITTED DISEASES) AIDS என்றால் என்ன? AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome அதாவது தேடிக் கொண்ட நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்த் தொகுதி சுருக்கமாக (தே.நோ.கு.தொ) எனலாம். தே.நோ.கு.தொ HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது. HIV எப்படி வருகிறது?  HIV பீடிக்கப்பட்டவரிடமிருந்து பீடிக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் ஊடாக அதாவது குறிப்பாக பாதகத்துக்குள்ளான குருதி அல்லது பாதகத்துக்குள்ளான விந்து வழியாகப் பரவுகிறது.  குருதி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு பரவுவது இரு முறைகளில் ஆகும். ஒன்று குருதி வழங்குவதன் மூலமும் அல்லது பிணியாளருக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்குச் மருந்து செலுத்தும் போதும் ஆகும்.  குருதி வழங்கும் போது வழங்குபவரின் குருதியில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும். மருந்து செலுத்தும் போது ஏற்றும் குழாயில் புதியதோர் ஊசி உங்கள் முன்பாகப் புகுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  வெறொரு விதமாகவும் குருதி மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் குருதி பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.  பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும். உடல் திரவங்கள் என்றால் என்ன? உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை குருதி, விந்து, யோனிக்கசிவுகள், எச்சில் ஆகும். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் HIV தொற்றுவதில்லை. ஏனெனில் அவர்களின் பாலுறவின் போது பாலியல் உறுப்புகள் உள்நுழைவதில்லை. அதனால் HIV உட்புக வாய்ப்பில்லை. அதேவேளையில் யோனியிலோ, குதத்திலோ, ஆண்ணுறுப்பிலோ எவ்வித வெட்டோ காயமோ இல்லாவிடினும் HIV நுழைந்து பரவுவது சற்று கடினமாக இருக்கும். இந்த வைரசு பிளவுபடக்கூடியது. ஆதலால், தோல் உட்புகாது விடின் இறந்துவிடும். பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ ஏற்பட்டு இருக்கின்றதோ என்பது தெரியாதிருக்கும். ஆகவே ஓரளவு கவனமாய் இருப்பது நல்லது . AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்? இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம் ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே. அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாலல்ல. பாலியல் உறவு கொண்டதாலேயே. பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும். இதன் விளைவாக ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதோடு HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்ட ஆரம்பித்து விட்டனர். AIDS என்பது வேறொருவரின் பிரச்சினைதான் என்று நினைப்பது முட்டாள்தனம். தற்காலத்தில் பெருமளவில் AIDS நோயால் பீடிக்கப்படுபவர்கள் ஆண் பெண் பாலியல் உறவினாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும். அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும். கருத்தடை உறை (Condom) என்றால் என்ன? (கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் பாலியல் உறுப்பு மீது அணியும் ரப்பர் உறை) உறைகளில் உள்ள இடைவெளியில் வெளிப்படும் மேலதிக விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பிலுள்ள காயங்களில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களாலான குருதி ஊடாகப் பரவும் வாய்ப்பை இழக்கிறது. கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. இதனால் ஆணின் விந்து பெண்ணின் முட்டையைச் சந்தித்து உறவு கொள்ளும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. கருத்தடை உறைகள் ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் உறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் வீசி எறியப்படுகிறது. தற்காலத்தில் பெண்கள் அணியக்கூடிய கருத்தடையும் வெளிவந்துவிட்டது. யோனித்துவாரத்தின் மிக அடிப்பகுதியில் வளையம் ஒன்றால் முனை பிடிக்கப்படுகிறது. பூப்பு என்புக்கு முன் தொடங்கி கருப்பைக் கழுத்துப் பகுதி வரை செல்கிறது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்பு நிமித்தம் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது. பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத நோய் வேறெதும் உள்ளதா? ஆம். ஹேப்ஸ். இந்நோயினால் மரணம் சம்பவிக்காது. வாழ்நாள் முழுவதும் உடனிருந்து அவ்வப்போது வேதனைதந்து கொண்டிருக்கும். ஹேப்ஸ் (Herpes) என்றால் என்ன? ஹேப்ஸ் ஒரு வைரஸ். இது உடலிற்குள் இருக்கும். அடிக்கடி வாயிலும் பாலியல் உறவு கொள்ளும் பகுதியிலும் குதத்திலும் தொப்புளங்களாகவும் புண்களாகவும் தலை காட்டும். எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்தத் தொப்புளங்களும் புண்களும் காணப்படும். இவை கடும் வேதனை தருவன. ஏனெனில் உணர்வு நரம்புகளில் வீக்கம் தோன்றும். உளைச்சல் படும் போது ஹேப்ஸ் புண்கள் தோன்றுகின்றன. நோவைத் தணிக்கக்கூடிய சில கழிம்புகள் உள்ளன. ஆனால் அவற்றால் முற்றாகக் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும். இதனை தவிர்த்துக் கொள்ளவுள்ள ஒரே வழி ஹேப்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹேப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது தவிர்ப்பது நல்லது.

0

6
Vivekananda Homeo Clinic & Psychologist Counseling
Subscribers
210K
Total Post
852
Total Views
471.7K
Avg. Views
6.4K
View Profile
This video was published on 2019-07-08 20:14:26 GMT by @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center on Youtube. Vivekananda Homeo Clinic & Psychologist Counseling has total 210K subscribers on Youtube and has a total of 852 video.This video has received 0 Likes which are lower than the average likes that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center receives an average views of 6.4K per video on Youtube.This video has received 6 comments which are lower than the average comments that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Vivekananda Homeo Clinic & Psychological Counseling Center