×

anuays's video: Thaip poosa Kavadi- Pilgrimage to Palani on foot by ardent Murugan devotees of Idaippadi Salem

@Thaip poosa Kavadi- Pilgrimage to Palani on foot by ardent Murugan devotees of Idaippadi ,Salem
தைப்பூசக் காவடிகள்- பழனிக்கு பாதயாத்திரை செல்லும் இடைப்பாடி ஸ்ரீ பர்வதராஜகுல மஹாஜனங்கள்- 358 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம் .... பழனி மலையில் இரவு தங்குவதற்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரே ஒரு நாள் மட்டும் சேலம் மாவட்டம் இடைப்பாடி நகரைச் சேர்ந்த பர்வதராஜகுலத்தைச் சேர்ந்த மக்கள் இரவு தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாக இந்த வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் தைப்பூசம் முடிவுற்ற பிறகு இச்சமுதாயத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பழனிக்கு காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வருகிறார்கள். அதே நாளில் இச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சேலம், கும்பகோணம், தாரமங்கலம், சென்னை, தஞ்சாவூர், கடலூர் மற்றும் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்தும் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து சேர்கிறார்கள். நடைப்பயணத்தின் போது பர்வதராஜகுல அன்னதான கமிட்டி மூலம் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அனைவருக்கும் , அனைத்து தினங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆகவே அனைத்து சமூகத்தினரும் பர்வதராஜகுல சமூகத்தினரோடு இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு முருகனை தரிசித்து பழனி மலையில் இரவில் தங்கி முருகனின் அருளுக்கு பாத்திரர் ஆகிறார்கள் . இந்த ஆண்டு தாய் மாதம் 7ஆம் தேதி (21.1.2019) இடைப்பாடியி ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் தைப்பூசம் பூஜை முடித்து புறப்பட்ட பாத யாத்திரை குழுவினர் தை மாதம் 12ஆம் தேதி (26.1.2019) பழனி அடைந்து , அன்று திருமுருகன் திருமலையில் காவடிகள் முத்திரை செலுத்தி, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் அன்று இரவு இராக்கட்டளை பூஜை சுவாமி தரிசனம் செய்து இரவு மலையில் தங்கி... . தை மாதம் 19 ஆம் தேதி (2.2.2019) அன்று இடைப்பாடி வந்து சேர்ந்தனர் , பாத யாத்திரையின் கடைசி கட்டத்தில் அவர்களுடன் இணைந்து இடைப்பாடி நகருள் பயணிக்கும் வாய்ப்பை , இடைப்பாடி மண்ணின் மைந்தரும், சிறந்த வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான் எனது நண்பர் திரு இடைப்பாடி அமுதன் ( Rtd. Deputy General Manager (Finance) BSNL, அவர்களின் அழைப்பு எனக்கு அளித்தது. அந்த உணர்வு பூர்வமான தருணங்களை இங்கு பகிர்ந்துள்ளேன் ...

16

0
anuays
Subscribers
12.6K
Total Post
214
Total Views
45.7K
Avg. Views
774.3
View Profile
This video was published on 2019-02-04 10:24:25 GMT by @anuays on Youtube. anuays has total 12.6K subscribers on Youtube and has a total of 214 video.This video has received 16 Likes which are higher than the average likes that anuays gets . @anuays receives an average views of 774.3 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that anuays gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @anuays